Showing posts with label இறப்பின். Show all posts

உயிர்த்தார் கிறிஸ்து உயிர்த்தார் !!!!!!!!!!!!!!!!!!!!!!

உயிர்த்தார் கிறிஸ்து  உயிர்த்தார் இந்த உலகை  ஜெயித்து விட்டார் 
மனுகுலத்தை  மீட்ட  இறைவன் கல்லறைவிட்டு  உயிர்த்துவிட்டார்  
அலகையின் பிடியில்  இருள்  சூழ்ந்த மனுகுலத்தை
ஒளி வீசும் விடியலால்     ஜெயித்து விட்டார்
கல்லிலும் முள்ளிலும் நடந்த யேசு  கால்கள் சோராது உயிர்த்துவிட்டார்
நல்ல மனம் கொண்ட யேசு  பலர் ஏளனம்  மத்தியில் வெற்றி கொண்டார்
அவரின் உயிருள்ள வார்த்தைக்கு உயிர் கொடுத்துவிட்டார்
விண்ணக வாழ்வில் ஏற்றம் காண மண்ணகத்தில் ஒளியாய்  உயிர்த்துவிட்டார்
நம்பிக்கை உள்ளங்களில்  உரம்  பெற  உயிர்த்துவிட்டார்
இறப்பின் முடிவை நீக்கி பிறப்பின் பலனை பெற புதிய வழி காட்டிவிட்டார்