Showing posts with label கவிதை. Show all posts

அழகே தனிடா

உலகின்  ௬ரை வானம் 
உலகின் மெத்தை முகில்கள் 
இரவில் ஒளி சந்திரன் 
இரவில் வர்ண விளக்கு நட்ச்சந்திரம்
அடடா இயற்கையின் அழகே தனிடா

எழமுடியும்

வட்ட வண்ண நிலவே 
மூவைந்து நாட்களில் தேய்கிறாய் 
மூவைந்து நாட்களில் வளருகிறாய்
வீழ்ந்தாலும் எழமுடியும் என
நம்பிக்கை ஊட்டுகிறாய்
எம்மை கொள்ளை கொள்கிறாய்

பூக்கும் ரோஜா நீ

முள்ளில்  பூக்கும் ரோஜா நீ 
உன்னை அள்ளிப் பறித்தேன் 
சொல்ல முடியா  அன்பில். 
என் அன்புக்கு வானம் இல்லை 
உன் அன்புக்கு எல்லை இல்லை 
அன்பின் நிழலில் இன்பத்தில்
இணையும் எம் இதயம்

பெருமை பெற

பெண்ணினத்தை அவமதித்துப் 
பெருமை பெற நினைத்தவர்கள் 
பெரும்பாவச் சுமையேற்றுப் 
பெற்ற துன்பம் உலகறியும் 
எண்ணி எண்ணிப் பெண் 
பெருமை ஏற்றிப் புகழ்ந்தே எழுதி
 இன்பமுற்ற்றார் இவ்வுலகில் 
இறைவனைப்போல் என்றும்முள்ளார் 

உயிர்த்தார் கிறிஸ்து உயிர்த்தார் !!!!!!!!!!!!!!!!!!!!!!

உயிர்த்தார் கிறிஸ்து  உயிர்த்தார் இந்த உலகை  ஜெயித்து விட்டார் 
மனுகுலத்தை  மீட்ட  இறைவன் கல்லறைவிட்டு  உயிர்த்துவிட்டார்  
அலகையின் பிடியில்  இருள்  சூழ்ந்த மனுகுலத்தை
ஒளி வீசும் விடியலால்     ஜெயித்து விட்டார்
கல்லிலும் முள்ளிலும் நடந்த யேசு  கால்கள் சோராது உயிர்த்துவிட்டார்
நல்ல மனம் கொண்ட யேசு  பலர் ஏளனம்  மத்தியில் வெற்றி கொண்டார்
அவரின் உயிருள்ள வார்த்தைக்கு உயிர் கொடுத்துவிட்டார்
விண்ணக வாழ்வில் ஏற்றம் காண மண்ணகத்தில் ஒளியாய்  உயிர்த்துவிட்டார்
நம்பிக்கை உள்ளங்களில்  உரம்  பெற  உயிர்த்துவிட்டார்
இறப்பின் முடிவை நீக்கி பிறப்பின் பலனை பெற புதிய வழி காட்டிவிட்டார்

அது உன்னைப் போலவே ஊமை

ஒரு மூங்கில் காட்டையே அழித்து
ஒரே ஒரு புல்லாங்குழல் செய்தேன்
ஊதும் போது தான் தெரிந்தது
அது உன்னைப் போலவே ஊமை என்று   

காதலர் தினம்

பல யுகங்கள் சென்றாலும் அழியாது காதலர் தினம் இரு மனங்கள் ஒன்று சேரும் இன்றைய தினத்தில் இன்பங்கள் பொங்கட்டும் இதயங்களில்

முதன்முதலில் பார்ப்பது உன் முகமே

உலகம்  எல்லாம்  அன்னையே போற்றுகின்றது  
முதன்முதலில் பார்ப்பது  உன் முகமே !
மனிதனை உருவாகுவதும் நீயே
இரவும் பகலும் உறங்காமல் 
பார்பவளும்  நீயே ! 
எதையும் எதிர்பார்க்காமல் பாசத்தை 
பொழிபவள் நீயே
உலகின் தெய்வம்  நீயே

பலர் அறிவதேயில்லை

பிறரின் உணர்வைப் புரிந்து
மதித்திடல் வேண்டும் 
வார்த்தைகளின் வடுக்களைப் 
பலர் அறிவதேயில்லை
உணர்வுகள் கண்ணீராய்
ஊறி காய்ந்துவிடுவதில்லை
அடிமனதில் ஊன்றினின்று
 காலத்தால் வீறுகொண்டெழும்    
என்பதை  உணர்ந்திடல் வேண்டும் 


 

சிற்றின்பம் கொள்கிறோம்

சில்லறை பொருள் மட்டில் 
சிற்றின்பம் கொள்கிறோம் 
சினம் கொண்டு அழிகின்றோம்  

ஒன்று கூடி வாழுது பார்

பறவைகள் பறப்பது பார் 
கவலைகள் இருக்குதா பார் 
சுகந்திரமாக பறக்குது பார் 
ஒன்று கூடி வாழுது பார் 

அழகே தனிடா

உலகின்  ௬ரை வானம் 
உலகின் மெத்தை முகில்கள் 
இரவில் ஒளி சந்திரன் 
இரவில் வர்ண விளக்கு நட்ச்சந்திரம்
அடடா இயற்கையின் அழகே தனிடா

மனிதர்கள் பல விதம்

மனிதர்கள் பல விதம் 
மனித குணம் பல விதம் 
மொழிகளும் பல விதம் 
காதல் ஒன்றே ஒரு விதம்

உள்ளமோ ஏங்குகிறது

வருடங்கள் கூடுகிறது 

மாதங்கள் ஓடுகிறது 

வயது   கூடுகிறது

அழகிய வடிவம் அழிகிறது 


உள்ளமோ ஏங்குகிறது 

குணங்கள் மாறுகிறது 

இயற்கை கூட சீற்றமடைகிறது  
  
என் அன்பே உன் புன்னகை மட்டும் 

இன்னும் மாறவில்லையே  !!!!!!!!! 

ஆயிடுவார் பெரியவர்

பெரிவர் என்பது வயதில் அல்ல 
மனதின் நல்ல எண்ணத்தில் 
ஆயிடுவார் பெரியவர்

செல் வந்த பூமியில்

தாயின் தாலாட்டு கேட்கவில்லை
செல் ஒலியே எனக்கு தாலாட்டு 
செல் வந்த பூமியில் 
நடைபிணமாக வாழ்ந்தேன்
என்றுமே விடியவில்லை எம்தேசம் 

உன் முட்கள் உன்னைக் குத்தவில்லை

உன்னில் 12 இலக்கங்கள் 



சிறியோர் முதல் பெரியோர் 


வரை உன்னைப் பார்க்கின்றார் 


உன் முட்கள் உன்னைக் குத்தவில்லை 


எமது இதய துடிப்பு உன்னில் கேட்கிறதே 


ஓயாமல் ஓடிக் கொண்டிருந்து எம்மையும் 


உன் பின்னால் ஓட வைத்துக் கொண்டிருக்கிறாயே 

இரவில் ஒளி சந்திரன்

உலகின்  ௬ரை வானம் 
உலகின் மெத்தை முகில்கள் 
இரவில் ஒளி சந்திரன் 
இரவில் வர்ண விளக்கு நட்ச்சந்திரம்
அடடா இயற்கையின் அழகே தனிடா

உயர்ந்திடு வா!ழ்வில்

சஞ்சலம் நிறைந்த வாழ்விலும்
சங்கடம் மலிந்த உலகிலும்
சருகாய் மடிந்து போகாமல்
நம்பிக்கையைப் பிடித்து
  உயர்ந்திடு வா!ழ்வில்

பலர் அறிவதேயில்லை

பிறரின் உணர்வைப் புரிந்து
மதித்திடல் வேண்டும் 
வார்த்தைகளின் வடுக்களைப் 
பலர் அறிவதேயில்லை
உணர்வுகள் கண்ணீராய்
ஊறி காய்ந்துவிடுவதில்லை
அடிமனதில் ஊன்றினின்று
 காலத்தால் வீறுகொண்டெழும்    
என்பதை  உணர்ந்திடல் வேண்டும்